‘காவல்நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் வீடியோ’- இளைஞர்கள் இருவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுக்கோட்டையில் காவல்நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக் டாக் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல் நிலைய போலீசார் கடந்த 3 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளாளவ் விடுதியைச் சேர்ந்த பாலையா என்ற இளைஞர் முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததால் காவலர்கள் அவரின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஒப்படைக்க ஜாமீன்தாரர் இருவரை அழைத்து வருமாறு போலீசார் கூறியுள்ளனர்.

image


Advertisement

அதன்படி பாலையா தனது நண்பர்களான நெருஞ்சிபட்டியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் மகேந்திரனை ஜாமீன் கையெழுத்து இடுவதற்காக காவல் நிலையம் அழைத்து வந்தார். ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த வெற்றிவேல் டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்த காவல்நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிடும் வகையில் வசனங்கள் இடம்பெற்று இருந்தது.

image

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தை தவறாக சித்தரித்து டிக் டாக் வீடியோ பதிவிட்டு சமூக வலையதளங்களில் வெளியிட்ட நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெற்றிவேலையும் வீடியோ பதிவு செய்த அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement