JUST IN

Advertisement

வேறு குடும்பத்திடம் மாற்றி கொடுக்கப்பட்ட கொரோனா நோயாளியின் சடலம்:தெலங்கானாவில் அதிர்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை அவரது சொந்த உறவினர்களிடம் அல்லாமல் மற்றொரு குடும்பத்திடம் தவறுதலாகக் கொடுக்கப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது.


Advertisement

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10 ஆம் தேதி கொரோனாவால் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழப்பு குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் மருத்துவமனையின் பிணவறையில் பார்த்த போது, அந்த நபரின் சடலம் அங்கு இல்லை. இதனால், அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால், மருத்துவமனையிலிருந்து கொரோனாவால் இறந்த அந்த நபரின் சடலம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த நபரின் உறவினர்கள் மருத்துவமனை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், அதிகாரிகள் கொடுத்த விளக்கங்கள் சரியாக இல்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் தான், அந்த நபரின் சடலம் தவறுதலாக மற்றொரு குடும்பத்திடம் கொடுக்கப்பட்டது என்பது அதனை அவர்கள் அடக்கம் செய்துவிட்டார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அறிந்து உயிரிழந்த நபரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த வாரமும் இதே மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதேபோல், இறந்தவர் ஒருவரின் சடலம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. மயானம் வரை சென்ற பின்னர் சடலம் மாறியுள்ளது தெரியவந்தது. பின்னர், அந்தச் சடலம் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement