தமிழகத்தில் அதிகரித்த கொரோனா உயிரிழப்பு சதவீதம் : இன்று ஒருநாளில் 23 பேர் மரணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வந்த போது உயிரிழப்புகள் மிகவும் குறைவாக இருந்ததால் சற்றே பயமில்லாமல் இருந்து வந்தது. ஒருவர், இருவர் என இறப்புகள் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக நாள்தோறும் 10 பேருக்கு கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 23 பேர் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 19 பேர் இறந்துள்ளனர். இதனால், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் 60 வயதிற்கு உட்பட்டவர்கள்.


Advertisement

உயிரிழந்துள்ளவர்களில் 3 பேருக்கு வேறு எந்த நோய் தாக்கமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கடந்த ஜுன் 6ம் தேதி முதல் இதுவரை இணை நோய்கள் இன்றி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் 41, 48,75 வயதுகளில் 3 ஆண்கள் இணை நோய்கள் இன்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இறப்புகள் குறைந்து வந்ததால் இறப்பு சதவீதம் ஒன்றுக்கும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக நாள்தோறும் பத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருவதால் இறப்பு சதவீதம் 1.01 ஆக அதிகரித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement