தம்பதிகள் இடையே தகராறு - தீக்குளித்த மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவரும் கவலைக்கிடம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தம்பதிகள் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். இதனையடுத்து மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

சென்னை வில்லிவாக்கம், ஆனந்தம் குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ் (40). இவரது மனைவி பாக்கியலட்சுமி (28). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தினேஷ் வேலைக்குச் சென்று விட்டு தினமும் இரவு வீட்டுக்குத் தாமதமாக வருவதைப் பழக்கமாக வைத்திருந்தார். இது தொடர்பாகக் கணவன்- மனைவி இடையே நீண்ட நாட்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. நேற்றிரவும் தினேஷ் பணி முடித்து விட்டு நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார். ஏன் தாமதமாக வருகிறீர்கள் என்று பாக்கியலட்சுமி கேட்டுள்ளார்.

image


Advertisement

இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது, பாக்கியலட்சுமி வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீப் பரவியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ், மனைவி மீது போர்வையைப் போர்த்தியும், தண்ணீரை ஊற்றியும் தீயை அணைத்தார். இதில் பாக்கியலட்சுமிக்கு வயிறு, முகம், தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

image

காப்பாற்றச் சென்ற தினேஷுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் 43 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வில்லிவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement