12 சென்ட் நிலத்திற்காக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியை கொலை செய்த உறவினர்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

12 சென்ட் நிலத்திற்காக உறவினரை கொலை செய்த  நபர்களை போலீசார் கைது செய்தனர். 


Advertisement

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணண். இவரது மனைவி ஜமுனா (எ) சின்னம்மா.
கிருஷ்ணணின் மகனும் தற்போது இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக உள்ள கிருஷ்ணனும், இவரது அண்ணன் தாமோதரன் ஆகிய இருவரும் 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இதில் 12 சென்ட் பொது இடத்திற்கு இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனிடையே 12 சென்ட் பொது இடத்தில் கிருஷ்ணண் தண்ணீர் தொட்டி கட்டியதாக கூறப்படுகிறது.

image


Advertisement


இதனால் நேற்று மாலை கிருஷ்ணணுக்கும் அண்ணண் தாமோதரன் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில் தாமோதரனின் மகன்கள் முருகன், காந்தி, பாஸ்கர் ஆகியோர் கிருஷ்ணண் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் தம்பதியினர் இருவரும் இரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

image


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பனமடங்கி காவல் துறையினர் இருவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கிருஷ்ணண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மனைவி ஜமுனா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பனமடங்கி காவல் துறையினர் தாமோதரன் மற்றும் அவரது மகன்கள் முருகன், காந்தி, பாஸ்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement