JUST IN

Advertisement

கர்நாடகா: 5-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் பாடங்களுக்கு தடை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் மழலையர் குழந்தைகளுக்கான வகுப்புகள் முதல் 5 ஆம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டன. இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்வு இல்லாமலேயே அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவர் என அறிவிப்பு வெளியானது.

image


Advertisement

இதனைத்தொடர்ந்தும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த ஆரம்பித்தன. இந்நிலையில் கர்நாடகாவில் மாணவர்களின் வயது மற்றும் மனநலம் ஆகியவற்றை கருதி மழலையர் குழந்தைகள் முதல் 5 ஆம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது என கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுரேஷ் குமார் “ மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகள் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து விவாதிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

ஆன்லைன் வகுப்புகள் குறித்து வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாங்கள் மனநல மருத்துவர்களிடமும் விவாதித்தோம். அதன்படி தற்போது மழலையர் குழந்தைகளுக்கான வகுப்புகள் முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது. இதனை தவிர்த்து பிற வகுப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் தொடரலாம். ஆன்லைனில் நடத்தப்படும் சில குறிப்பிட்ட வகுப்புகளுக்கான, சரியான கால நேரம் குறித்து பின்னர் விவாதிக்கப்படும். ஆன்லைனில் பாடங்கள் நடத்துவதற்கான கட்டணம் அமல்படுத்தப்படும்” என அவர் பேசினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement