தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 1008 பேர் டிஸ்சார்ஜ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து 1,897, பிற மாநிலங்கள், நாடுகளிலிருந்து வந்தவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 24,531லிருந்து 25,937 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 1392 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 11வது நாளாகத் தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பால் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

image

மாவட்ட ரீதியாக சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்து திருவள்ளூரில் 105 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், காஞ்சிபுரம் - 33, ராணிபேட்டை - 24, திருவண்ணாமலை - 23, தூத்துக்குடி - 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் ஒரே நாளில் 1008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

image

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் - 36,841
இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு - 1,927

இன்று மட்டும் செய்யப்பட்ட கொரோனா சோதனை - 17,675
இதுவரை செய்யப்பட்ட சோதனைகள் - 6,09,856

இன்று ஒரே நாளில் டிஸ்சார் செய்யப்பட்டவர்கள் - 1,008
இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் - 19,333

கொரோனாவால் இன்றைய உயிரிழப்பு - 19
கொரோனாவால் மொத்த உயிரிழப்பு - 326

loading...

Advertisement

Advertisement

Advertisement