Advertisement

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், “ மத்திய வங்கக் கடல் மற்றும் வட தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

image


Advertisement

மறைக்கப்படுகிறதா கொரோனா பலி ? டைம்ஸ் ஆஃப் இந்தியா அதிர்ச்சி கட்டுரை 

இதேபோல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 3 சென்டி மீட்டர், நாகையில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement