சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்: மணமேடையில் மடக்கி பிடித்த போலீசார்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் காதலிப்பதாக ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த மணமகனை திருமண மண்டபத்திலேயே போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.


Advertisement

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுபட்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி (16) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் (21) என்ற இளைஞருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

Class 9 student sexually abused at Kolkata school, staffer held ...


Advertisement

கொரோனா: ஸ்டான்லியில் இதுவரை இணைநோய்கள் ஏதும் இல்லாத 16 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உதயகுமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கர்ப்பிணியான மாணவி உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு உதயகுமாரிடம் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் உதயகுமார் அவரை திருமணம் செய்ய மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Domestic violence, child abuse victims to receive help from new ...


Advertisement

இதனிடையே இன்று உதயகுமாருக்கும் வேறொரு பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றதை அறிந்த சிறுமி இது குறித்து மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அந்த இளைஞர் மீது புகாரளித்தார். இதனால் உடனடியாக நிலக்கோட்டை சென்ற மகளிர் போலீசார் திருமண மண்டபத்திலேயே மணமகன் உதயகுமாரை மடக்கி விசாரணை நடத்தியதில் மணமகன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement