கட்சிப் பணிகளில் திறமை... 3 முறை எம்எல்ஏ பதவி.. ஜெ.அன்பழகன் கடந்து வந்த பாதை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். திமுகவில் 3 முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர் ஜெ.அன்பழகன்.


Advertisement

பழக்கடை ஜெயராமனின் மகன்தான் ஜெ.அன்பழகன். ஜெயராமன், திமுக மீது அதிக பற்று கொண்டவர். அவர் வழியில் அன்பழகனுக்கும் திமுகவில் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அன்பழகனை பொருத்தவரை தொகுதி செயலாளராக இருந்து படிப்படியாக முன்னுக்கு வந்தவர். சைதை சித்துவுக்கு பிறகு  சென்னையில் திமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். அதன்பின் சென்னை திமுகவின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட செயலாளர் என்ற பொறுப்பை வகித்து வந்தார்.

ஜெ. அன்பழகன்


Advertisement

கொரோனா: ஸ்டான்லியில் இதுவரை இணைநோய்கள் ஏதும் இல்லாத 16 பேர் உயிரிழப்பு

2001-ஆம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 2006 ஆம் ஆண்டு தோல்வியை சந்தித்தார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருந்தார். தற்போது மூன்றாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தொடர்ந்தார். திமுக கட்சி பணிகளில் தீவிரமாக பணியாற்றியவர்.கட்சிப் பணிகளை திறம்பட செய்து முடித்து தலைமையிடம் பாராட்டு பெறுவதில் வல்லவர் ஜெ. அன்பழகன்.

கொரோனா பாதிப்பு- திமுக எம்.எல்.ஏ. ஜெ ...


Advertisement

அன்பு பிக்சர்ஸ் பெயரில் ஜெயம் ரவியின் ஆதிபகவன் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். சந்தீப் கிஷன் நடித்த ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தை விநியோகம் செய்துள்ளார். திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் இன்றுதான் 62-வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement