தமிழகத்தில் இன்று 1,685 பேருக்கு கொரோனா உறுதி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
தமிழகத்தில் இன்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. 
 
Image
 
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,325 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்தம் 307 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
image
 
சென்னையில் மட்டும் இன்று 1,243 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது.
loading...

Advertisement

Advertisement

Advertisement