கழுதையை வைத்து சூதாட்ட ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய கழுதையும் கைது செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் பஞ்சாபில் கழுதைகளை வைத்து சூதாட்ட ஓட்டப்பந்தயம் நடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. பஞ்சாபின் ரஹீம் யார்கான் பகுதியில் இந்தச் சூதாட்ட ஓட்டப்பந்தயம் நடந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்து பலர் தப்பியோடிய நிலையில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் கழுதையையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20ஆயிரத்தையும் கைப்பற்றி உள்ளனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கழுதையின் பெயரையும் காவல்துறை சேர்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்ட கழுதை காவல் நிலையத்திற்கு வெளியே கட்டி வைக்கப்பட்டுள்ளது. சூதாட்ட ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட கழுதை தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Donkey arrested for participating in a gambling racing in Rahim Yar Khan. Eight humans also rounded up, Rs 120,000 recovered. https://t.co/RIULiecduw pic.twitter.com/1FipntTR60 — Naila Inayat नायला इनायत (@nailainayat) June 7, 2020
“ஜூலைக்குள் டெல்லியில் 5.5 லட்சம் கொரோனா நோயாளிகள் ஏற்பட வாய்ப்பு” - துணை முதல்வர் தகவல்
Loading More post
#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை!
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!