தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தின் எந்தபகுதியிலும் பிளாஸ்டிக் அரிசி இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


Advertisement

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார் எழுந்தவுடன் தமிழகத்தில் உள்ள 3,124 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு, 6 ஆய்வகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் தமிழகத்தில் எந்த இடத்திலும் பிளாஸ்டிக் அரிசி இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இதனால், பிளாஸ்டிக் அரிசி குறித்த தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 10 வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.   

loading...

Advertisement

Advertisement

Advertisement