நான் டெல்லியில் வசிக்கிறேன்; வேலைபார்க்கிறேன். நான் டெல்லிவாசியா?- ப.சிதம்பரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லிவாசி என்றால் யார் என கெஜ்ரிவால் நமக்கு விளக்கம் அளிப்பாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்


Advertisement

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், வீடியோ மூலம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களை அனுப்பதிப்பது குறித்து அவர் உரையாற்றினார். டெல்லி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் கொரோனா பாதிக்கப்படும் டெல்லிவாசிக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

image


Advertisement

இந்நிலையில் கெஜ்ரிவாலில் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர். டெல்லி அரசு மருத்துவமனைகளில் வெளிமாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் டெல்லிவாசி என்றால் யார் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், டெல்லி மருத்துவமனை டெல்லிவாசிக்களுக்கு மட்டுமே என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லிவாசி என்றால் யாரென அவர் நமக்கு விளக்கம் அளிப்பாரா? நான் டெல்லியில் வசிக்கிறேன். டெல்லியில் வேலை பார்க்கிறேன். நான் டெல்லிவாசியா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

சிறுமிக்கு அவசரமாக தேவைப்பட்ட ரத்தம்: விரைந்து சென்று உதவிய காவலர்!

loading...

Advertisement

Advertisement

Advertisement