புதுச்சேரி கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரி கடற்கரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.


Advertisement

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் 2ஆம் கட்டம், 3ஆம் கட்டம், 4ஆம் கட்டம் மற்றும் தற்போது 5ஆம் கட்டம் என பொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 31ஆம் தேதி வரை பிறக்கப்பிக்கப்பட்டுள்ள 5ஆம் கட்ட பொதுமுடக்கத்தில் 3 பிரிவுகளாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பலரும் முகக்கவசம் கூட அணியாமல் வந்திருந்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். இதற்கிடையே கடற்கரையை கண்ட பலர் கூச்சலிட்டு குதுகலித்தனர்.

ஒடிசாவில் பயிற்சி விமான விபத்து : தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட இருவர் உயிரிழப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement