உலக அளவில் 71 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - அமெரிக்கா முதலிடம்

nearby-71--lakhs-people-affected-by-corona-worldwide

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்தை நெருங்கியுள்ளது.


Advertisement

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,91,634 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,06,192 ஆக உள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,61,061 ஆக உள்ளது.

image


Advertisement

இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அங்கு 20,07,449 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,12,469ஆக உள்ளது.

இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,486ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,207 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. இதனிடையே பிரேசில் இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும், ஸ்பெயின் நான்காவது இடத்திலும், லண்டன் 5வது இடத்திலும் உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement