மாடு கடத்தல் கும்பலால் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்து உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் நாளை அவரது சொந்த மாவட்டமான கன்னியாகுமரிக்குக் கொண்டுவரப்பட உள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பங்கிராஜ்(60). கூலித்தொழிலாளியான இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவருடைய இளைய மகன் மணிகண்டன் (28). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு துணை ராணுவ பிரிவில் (எஸ்எஸ்சி) பணியில் சேர்ந்து தற்போது பீகார் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த மார்ச் 7ம் தேதி இரவு 8 மணிக்கு இவர் தாகூர்கன்ஞ் மாவட்டம் பீகார் - நேபாளம் எல்லையிலுள்ள கக்காட்டியா சோதனைச் சாவடியில் இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். இவருடன் 2 வீரர்களும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வாகனத்தைத் தடுத்துச் சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் மாடுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க மணிகண்டன் முற்பட்டபோது, மாடு கடத்தல் கும்பல் ஆயுதங்களால் மணிகண்டனையும், மற்ற வீரர்களையும் பயங்கரமாகத் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சிலிகுரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 5ம்தேதி இரவு உயிரிழந்தார். அவரது உடல் திருவனந்தபுரம் வழியாகக்கொண்டு வரப்பட்டு நாளை காலை ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சிறுமி - இழுத்துச் சென்ற சிறுத்தை!
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை