ஹர்பஜன் பட போஸ்டரை ஷேர் செய்த சச்சின் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement


அர்ஜுன், ஹர்பஜன் சிங், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தள்ள சச்சின் டெண்டுலகர் ஒரு சுவாரஸ்யமான பதிவை பதிவிட்டுள்ளார்.

 


Advertisement

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி வரும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த லாஸ்லியா, நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.


Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்ட நிலையில் கொரோனா காரணமாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனிடையே இப்படத்தின் போஸ்டரை கடந்த ஜீன் 5 ஆம் தேதி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இந்தப் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் “ உங்களுக்கு நட்பு இருந்தால் இந்தப் படத்தை நீங்கள் பார்க்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement