[X] Close >

"பிரதமர் மோடி அருகில் இருக்கிறார்" நடிகரிடம் பண மோசடி செய்ய முயன்ற நபர்கள் !

-PM-Modi-is-near--people-trying-to-cash-in-on-actor-

"பிரதமர் மோடி அருகில் இருக்கிறார்" நடிகரிடம் பண மோசடி செய்ய முயன்ற நபர்கள் !


Advertisement


திரைப்பட நடிகரிடம் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நிதி உதவி கொடுக்க சொன்னதாக கூறி மோசடி செய்ய முயன்ற நபர்களின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் காய்கறிக் கடை நடத்திவருகிறார். திரைத்துறையில் நடிகரகாவும் நடித்து வரும் இவர் "மான் குட்டி" என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தொலைப்பேசி வாயிலாக அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் “நாங்கள் நுங்கபாக்கம் தலைமை அலுவலத்தில் இருந்து பேசவதாகாவும், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி ஊரடங்கு காலத்தில் வறுமையால் வாடும் ஏழை மக்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் 5,500 யை செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் உங்களின் வங்கி இதை நாங்கள் செலுத்தி விடலாமா என்றும் கேட்டுள்ளார்.


Advertisement

image

இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட சுரேஷ், நீங்கள் எனது வங்கியில் பணத்தை செலுத்தலாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து எதிர் நபர் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதற்கு முன்னதாக இடைமறித்த சுரேஷ் மோடி உங்கள் அருகில் இருக்கிறாரா எனக் கேட்டிருக்கிறார். எதிர் நபரும் மோடி இருக்கிறார் எனக் கூற சுரேஷ் நான் மோடியுடன் பேச முடியுமா எனக் கேட்க எதிர் நபர் இதோ கொடுக்கிறேன் எனக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார்.

image


Advertisement

இதனையடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுரேஷ் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பேசிய அவர் "ஊரடங்கு காலத்தில் இது போன்ற மோசடி பேர் வழிகள் அப்பாவிகளை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்கின்றனர். அதனால் யாரும் ஏமாறாதீர்கள். கவனமாக இருங்கள்". என்று பேசியுள்ளார்.

பொதுமக்கள் வங்கிப்பணத்தில் மோசடி செய்யும் நபர்கள், ஊரடங்கு காலத்தை பயன்படுத்தியும் கொள்ளை அடிக்க முயன்று வருகிறார்கள். அதனால் நாம் இந்தக் காலக்கட்டத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது என்பது அவசியமாகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close