[X] Close >

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம்

Indian-weather-centre-said-about-rain-in-tamilnadu

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

மேலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகரும் எனவும் கர்நாடகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. 

image


Advertisement

ஏற்கெனவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒன்றாம் தேதி தொடங்கிய நிலையில் வங்கக்கடலில் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மற்ற பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும். 

image

மேலும் தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமானை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close