இம்ரான் கான் சாகச வீராங்கனையுடன் பாலியல் உறவில் ஈடுபட விரும்பினார் ! பகீரங்க குற்றச்சாட்டு

Pakistani-television-host-claims-PM-Imran-Khan-wanted-to-have-sex-with-American-adventurist-Cynthia-Ritchie

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சாகச வீராங்கனை சின்தியா ரிச்சியுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக பாகிஸ்தான் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image

பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் அலி சலீம் நிகழ்ச்சியொன்றில் கூறும் போது “ ஒரு முறை சின்தியா ரிச்சி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நெருக்கமாக இருக்கும் சூழல் வந்ததாகவும் அப்போது இம்ரான் கான் சின்தியாவிடம் உடலுறவு கொள்ள விருப்பம் தெரிவித்தாக தன்னிடம் கூறியனார்" அலி சலீம் தெரிவித்துள்ளார்.


Advertisement

நேற்று பேஸ்புக் நேரலையில் பேசிய சாகச வீராங்கனை சின்தியா, கடந்த மார்ச் 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தன்னை இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். மேலும் பேசிய அவர் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி, சுகாதார அமைச்சர் மக்தூம் ஷாஹாபுதீன் ஆகியோர் மீதும் பாலியல் ரீதியான குற்றசாட்டுகளை வைத்தார்.

image

இதனையடுத்து பேசிய பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் "சின்தியா முன்வைக்கும் குற்றசாட்டுகள் ஆதாரமற்றது என்றும் இது ஒரு வெட்கக்கேடான பொருந்தாத குற்றசாட்டுகள்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement