பசுவுக்கு வெடிமருந்து கொடுத்த விவகாரம்: ஒருவர் கைது !
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடிமருந்து வைத்துக் கொடுத்ததில் அதன் வாய் சிதைந்து காயமடைந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இமாச்சலப்பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில், கர்ப்பிணி பசுவுக்கு, கோதுமை மாவு உருண்டைக்குள், வெடி வைத்துக் கொடுத்ததால், பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இந்தச் சம்பவம் நடந்த போதிலும் பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் காயமடைந்த கர்ப்பிணி பசுவின் வீடியோவை ஊடகங்களில் பதிவேற்றியதன் மூலம் இது வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது.
இதனையடுத்து பசுவிற்கு வெடிமருந்தை தனது பக்கத்து வீட்டுக்காரரான நந்த் லால் திமான் என்பவர் கொடுத்தார் என குர்தயால் சிங் கூறியதின் அடிப்படையில்
நந்த் லால் திமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பிலாஸ்பூர் எஸ்.பி கூறும் போது “ குர்தயால் சிங் புகார் அளித்ததின் அடிப்படையில் மருத்துவ குழுவோடு நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். பசுவை பார்த்த போது வெடிமருந்து மருந்து வெடித்ததில் பசுவின் வாய் மற்றும் தாடை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கிராம மக்கள் தங்களது பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க இவ்வாறு செய்கின்றனர். மேலும் கடந்த மே 26 ஆம் தேதியே இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
மேலும் அவர் " பசுவானது குர்தயால் சிங் வீட்டிலிருந்து 20 மீட்டர் தூரத்தில் இரவு 8.15 அளவில் புற்களை மேய்ந்து கொண்டிருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட சத்தம் கேட்டு அங்கு குர்தயால் சென்று பார்த்த போது பசுவின் வாயானது வெடிமருந்தால் சிதைந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப்பின்னர் பசுவானது ஒரு கன்று குட்டியை ஈன்றது” என்றும் அவர் கூறினார்.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்