ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி: 3 ஆயிரத்திற்குக் குழந்தையை விற்ற சோகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் வறுமை காரணமாக மேற்கு வங்கத்தில் 2 மாதக் குழந்தையை ஒரு தம்பதி ரூ.3000க்கு விற்பனை செய்துள்ளனர்


Advertisement

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் தற்போது கொடுக்கப்பட்டாலும் தொடக்கத்தில் தளர்வுகள் ஏதும் இன்றி ஊரடங்கு அமலானது. இந்த ஊரடங்கால் பலரும் வருமானமின்றி பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அன்றாடம் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

image


Advertisement

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வறுமை காரணமாக 2 மாதக் குழந்தையை ஒரு தம்பதி ரூ.3000க்கு விற்பனை செய்துள்ளது. ஊரடங்கு காரணமாகக் கடந்த 3 மாதங்களாக வேலை ஏதும் இல்லாத நிலையில் வறுமையில் வாடிய குடும்பம் தங்களது இரண்டரை வயதுக் குழந்தையை உறவினர்களிடம் விற்பனை செய்துள்ளனர்.

இது குறித்துத் தெரிவித்துள்ள போலீசார், வறுமை காரணமாகக் குழந்தைக்கு உணவு கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் குழந்தையை விற்றுள்ளதாகத் தெரிகிறது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் 17 முதல் 60 வயதுடையவர்கள் 47 பேர் கொரோனாவால் உயிரிழப்பு


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement