JUST IN

Advertisement

"மக்கள் இயக்கமாக மாறினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்" - ஜெ.ராதாகிருஷ்ணன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் மக்கள் இயக்கமாக மாறினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னையில் தண்டையார்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் " மக்கள் இயக்கமாக மாறினால் மட்டுமே இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைந்து, பரிசோதனை அதிகரித்துள்ளது என மத்தியக் குழு தெரிவித்துள்ளது" என்றார்.

image


Advertisement

மேலும் அவர் " தினமும் 1000 பேர் நோய்த் தொற்று பாதிப்புக்கு உள்ளாகும்போது பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகின்றது. சென்னையில் 16.53 விழுக்காடு தெருக்களில் மட்டும் தான் நோய்த் தொற்று வந்துள்ளது. நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.

image

மேலும் கூறிய ராதாகிருஷ்ணன் " உலக சுகாதார நிறுவனம் அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் மக்கள் இயக்கமாக இந்தத் தொற்றை ஒழிக்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். தெரு வாரியாக தகவல்கள் கண்டறியப்பட்டு அதற்கேற்றபடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார் அவர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement