மதுரை : டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்

madurai-women-protest-against-tasmac-open

மதுரையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் ஏற்கெனவே 4 அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. இங்கு மது குடிப்பவர்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இதே பகுதியில் மேலும் புதிதாக ஒரு அரசு டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு இன்று திறக்க திட்டமிடப்பட்டிருந்தது.

image


Advertisement

இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் கடை திறக்கப்படாது என உத்தரவாதம் வழங்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் மதுரையிலிருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நிரந்தரமாக இந்த கடை செயல்படாது என காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement