JUST IN

Advertisement

வீடுகளில் இருந்தே நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள்: சென்னை உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில்,  நீதிபதிகள் நீதிமன்றம் வராமல் தங்கள் வீடுகளில் இருந்தே காணொலியில் வழக்குகளை விசாரிப்பார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Advertisement

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டது. முக்கிய வழக்குகளை நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஜூன் 1-ஆம் தேதி முதல் நீதிபதிகள் தங்கள் நீதிமன்ற அறைகளுக்கு வந்து வழக்குகளை வீடியோ கான்ப்பெரன்ஸ் மூலம் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டு, அதன்படி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

image


Advertisement

கேரள யானை விவகாரத்தில் அவதூறு பேச்சு: மேனகா காந்தி மீது வழக்குப் பதிவு ! 

இந்நிலையில், வழக்குகளை விசாரித்து வந்த 3 நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாய ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு தீர்மானத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இனி இரு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் மட்டுமே செயல்பவார்கள் என்றும், அவர்களும் தங்கள் வீடுகளில் இருந்தே வீடியோ கான்ப்பென்ஸ் மூலமாக அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக ஆஜராகி வாதிடும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement