JUST IN

Advertisement

”மருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்குத் தலை வணங்குகிறேன்” - முதல்வர் பழனிசாமி  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருநாள்கூட விடுப்பு எடுக்காத மருத்துவருக்கு முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டரில் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்


Advertisement

கொரோனா என்ற வார்த்தையை உலக நாடுகள் உச்சரிக்கத் தொடங்கிய நாள் முதலே அரசுகள் பரபரப்பாகின. எளிதில் பரவும் தொற்று நோய் என்பதால் மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் எனப் பலரும் தீவிரமாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

image


Advertisement

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக இரவு பகல் பாராமல் அவர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களை முன் கள வீரர்கள் என அரசு பெருமையாக அழைக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருநாள்கூட விடுப்பு எடுக்காத மருத்துவருக்கு முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டரில் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பதிவிட்டுள்ள முதலமைச்சர், '' ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்துவரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்குத் தலை வணங்குகிறேன். அதேசமயம் அவரது உடல்நலனையும் கவனித்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்


Advertisement

சென்னை கொரோனாவின் மையப்புள்ளி ஆனது ஏன்? - விஜயபாஸ்கர் V/S சுமந்த் சி ராமன் அலசல்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement