சென்னை கொரோனாவின் மையப்புள்ளி ஆனது ஏன்? - விஜயபாஸ்கர் V/S சுமந்த் சி ராமன் அலசல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பரவலின் ஹார்ட்ஸ்பாட் ஆக இன்று சென்னை மாறியிருக்கிறது. கடந்த சில மாதங்களாக அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் முன்பெல்லாம் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் வயதானது பெரும்பாலும் 40க்கு மேலாகத்தான் இருந்தது. ஆனால் சமீப காலமாக அதிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 17 வயது சிறுமி, 33 வயது இளம் பெண் உட்பட 12 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் முன்பைவிட மக்களிடம் கொரோனா மீதான பயம் அதிகரித்துள்ளது.


Advertisement

image

எதனால் இந்தத் திடீர் உயிரிழப்புகள்? இது குறித்த விளக்கங்களைப் பெற நாம் மருத்துவர் சுமந்த் சி ராமனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.


Advertisement

 

”கொரோனா விவகாரத்தில் ஆரம்பமான நாள் முதலே நான் கூறி வரும் ஒரே விஷயம் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு கொரோனா குறித்த சிறு அறிகுறி இருந்தாலும் அவருக்கு கொரோனா பரிசோதனையை அரசு செய்ய வேண்டும். அப்படி தொடர்ச்சியாகச் செய்யும் போது மட்டும்தான் கொரோனா பரவலானது குறையும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 25,000 கொரோனா பரிசோதனைகளாவது நடத்தப்பட வேண்டும்.

தற்போது வயது வித்தியாசமின்றி கொரோனாவுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு இளைஞர் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகச் சொல்லி மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கு முழுமையான கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை.


Advertisement

image

அவர்களை இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வரச் சொல்கிறார்கள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து வரும் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு கொரோனா உறுதிசெய்யப்படுகிறது.இதனை தொடர்ந்து அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அனுமதிக்கப்பட்ட இரண்டு மூன்று நாட்களில் அவர் இறந்து விடுகிறார். நோயாளியை அலட்சியப்படுத்தும் அந்த இடைவெளியில் அவரது உடலில் கொரோனாவின் வீரியம் அதிகமாகி விடுகிறது” என்றார்.

கொரோனா பரவல் தடுப்பில் மிக முக்கிய நடவடிக்கையான மக்களுக்கு அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்வதில் அரசு ஏன் சுணக்கம் காட்டி வருகிறது?

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்த முதல் இரண்டாம் கட்ட ஊரடங்குகளை அரசு இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
ஊரடங்கின் நோக்கங்கள் என்ன, 1. கொரோனா பரவல் தொற்றைப் பெருமளவில் தடுக்க வேண்டும். 2. கொரோனா பரவலில் மிக முக்கிய பங்காற்று டெஸ்ட் கிட்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். 3. கொரோனா பரவல் அதிகரிக்கும் போது அதனை எதிர்கொள்ளத் தேவையான வெண்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளைத் தயார் நிலையில் வைத்தல் வேண்டும்.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஊரடங்கில் அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை, குறிப்பாகப் பரிசோதனைகளை அதிகப்படுத்துதலுக்கான முன்னெடுப்புகளை அதிக அளவில் செய்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே அவர்களால் தற்போது பெருமளவில் கொரோனா பரிசோதனைகளைச் செய்ய முடிவதில்லை”என்றார்.

 

இந்தக் கேள்வியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் முன் வைத்ததற்கு அவர் விளக்கம் அளிக்கும் போது “ மத்திய அரசு எங்களுக்கு அறிவுறுத்தியுள்ள விதிகளின் படியே நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசு என்ன கூறியிருக்கிறது என்றால் மருத்துவ மனைக்கு வரக்கூடிய நோயாளியானவர் கொரோனா பாதிக்கப்பட்ட நாட்டையோ அல்லது மாநிலத்தையோ சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட நபர்களுடனோ அவர்கள் தொடர்பிலிருந்திருக்க வேண்டும்.

image

இது மட்டுமன்றி அவருக்குக் காய்ச்சல், மூச்சுத் திணறல், இருமல் உள்ளிட்ட மூன்று அறிகுறிகள் இருக்க வேண்டும், அப்படி இருக்கும் போது மருத்துவர்களின் அறிவுரைப்படி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மற்றபடி கட்டாயமாகப் பரிசோதனை எடுக்க வேண்டிய நிலை என்பது இல்லை. இதையெல்லாம் மீறி நோயாளி பயந்து வேதனையுடன் வரும் போது அவருக்கு மருத்துவ அறிவுரையின் படி பரிசோதனைகள் செய்யப்படுகின்றன” என்றார்.

image

மேலும் பேசிய அவர் முதலில் மக்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். நான் ஆய்வுக்காகச் செல்லும் இடங்களில் மக்கள் கொரோனா குறித்த எந்த வித பயமும் இல்லாமல் இருக்கின்றனர். என்னையோ அல்லது அதிகாரிகளை திடீரென சந்திக்கும் மக்கள் தங்களிடம் இருக்கும் துணிகளைப் பயன்படுத்தி முகத்தை மூடிக் கொள்கின்றனர்.

இவ்வளவு அறிவுறுத்தல்களை ஊடகம் வழியாக அரசு கொடுத்த போதும் மக்கள் அதனைப் புறந்தள்ளுகின்றனர். இப்படி இருக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும். ஆகவே மக்கள் கொரோனா பரவலின் முக்கிய நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

image


உண்மையில் கொரோனா எண்ணிக்கை குறித்தும், உயிரிழப்புகள் குறித்து மக்கள் அச்சப்படுவதாலோ, அரசின் செயல்பாடுகளைப் பிற மாநில நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பேசுவதாலோ மட்டும் கொரோனா பரவலைத் தடுக்க முடியாது. ஒவ்வொருவரும் கொரோனாவுக்கான தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா குறித்து இவ்வளவு அறிவுறுத்தல்கள் இருந்த போதும், நம்மால் இயன்றவரை கொரோனா குறித்த முன்னெடுப்பு நடவடிக்கைகளை நாம் செய்யவில்லை என்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயமாகவே இருக்கிறது. இதற்குச் சான்றுகள்தான் காவல்துறைக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்கள் கொடுத்திருக்கும் அபராதத் தொகைகள்.

image

அப்படி இருக்கும் போது அரசை மட்டும் குற்றம் சாட்டுவது சரியா. அரசுக்கு நீங்கள் மட்டும் முக்கியமில்லை. அனைவரும் முக்கியம். அதே சமயம் அரசும் உங்களுக்கு ஓரளவுதான் உதவிசெய்யும். அந்த உதவி எல்லையை மீறும் போது அரசானது பிற விஷயங்களின் மீது கவனம் செலுத்தச் சென்று விடும். ஆகவே உங்களின் உயிரைக் காப்பாற்றும் முதல் நபராக நீங்கள் இருங்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடிந்தளவு கையில் எடுங்கள். இது மட்டும் தான் கொரோனாவிடம் இருந்து நம் அனைவரையும் காப்பாற்றும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement