சூர்யாவின் "சூரரைப் போற்று"படத்துக்கு யூ சான்றிதழ் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள "சூரரைப் போற்று" திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு அதற்கு "யூ" சான்றிதழ் கிடைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை ‘துரோகம்’, ‘இறுதிச் சுற்று’ போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். "ஏர் டெக்கான்" உரிமையாளரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.


Advertisement

image

அதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமானநிலையத்தில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் சூர்யா, "ஸ்பைஸ் ஜெட்" விமானத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் உள்படப் பலரும் கலந்து கொண்டனர். மேலும், அகரம் சார்பில் 100 பள்ளி மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வந்தன. முன்னதாக இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வெளியாவதாக இருந்தது.

image

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், திரைத்துறை முற்றிலுமாக முடங்கியது. திரையரங்கங்களும் மூடப்பட்டுள்ளன. எப்போது மீண்டும் பணிகள் தொடங்கும் என்ற உத்தரவாதம் இல்லாமல் நிலைமை நீடிக்கிறது. இதனிடையே ‘சூரரைப் போற்று’ படத்தைப் படக்குழு வரும் சுதந்திர தின கொண்டாட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஒருவேளை நிலைமை சீராகவில்லை என்றால் மீண்டும் வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.


Advertisement

ஆனால் படத்தின் அனைத்து வேலைகளும் இப்போது முடிந்து தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் தணிக்கை முடிந்து "சூரரைப் போற்று" படத்துக்கு "யூ" சான்றிதழ் கிடைத்திருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement