தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 8-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கு இன்றும் நாளையும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்