தனியாரில் கொரோனாவுக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரும் மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரும் மனுவிற்கு மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ்க்கு இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சச்சின் ஜெயின் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த மே 27ஆம் தேதியன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே , ஏஎஸ் போபன்னா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசால் இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களில் செயல்படும் தனியார் மருத்துவமனை ஏன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியது.

image


Advertisement

இதற்கு விளக்கமளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், 2010ஆம் மருத்துவ நிறுவனங்கள் பதிவு சட்டப்பிரிவின்படி, பொது நிலங்களில் செயல்படும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் சிகிச்சையை இலவசமாக வழங்க வேண்டும் என உத்தரவிட முடியாது என தெரிவித்தது. அத்துடன் இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்றபடி முடிவுகளை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

இதனிடையே தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரும் மனுவிற்கு மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

முன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து : பணத்தை திரும்பத்தர தொடங்கிய ரயில்வே

loading...

Advertisement

Advertisement

Advertisement