காஃபி டே நிறுவனர் மகனை கரம் பிடிக்கும் கர்நாடக காங். தலைவர் மகள் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரான டி.கே.சிவகுமாரின் மகளுக்கும் மறைந்த காஃபி டே நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்தாவின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் காஃபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார். கடந்தாண்டு சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றங்கரையோரம் மாயமானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் 36 மணி நேரத்துக்குப் பிறகு அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் உடற்கூராய்வு செய்யப்பட்ட அவரது உடல் அவரது காஃபி எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கூறியது.

image


Advertisement

இந்நிலையில் கர்நாடக மாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவரான டி.கே.சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், மறைந்த சித்தார்த்தாவின் மகன் அமர்த்யாவுக்கும் இந்தாண்டு இறுதியில் திருமணம் நடைபெற இருப்பதாக "தி நியூஸ் மினிட்" செய்தி வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த இருவருக்கும் ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவருக்குமான திருமண முடிவு சித்தார்த்தா உயிருடன் இருக்கும்போதே பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

image

டி.கே.சிவகுமாரின் மகளான 22 வயதான ஐஸ்வர்யா பொறியியல் பட்டதாரி. இவர் தந்தையின் நிறுவனமாக "குளோபல் அகாதெமி டெக்னாலஜி"யை கவனித்து வருகிறார். சித்தார்த்தாவின் மகனான 27 வயதான அமர்த்யா தன் தாயுடன் இணைந்து காஃபி டே மற்றும் குடும்பத்தின் குழும நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement