[X] Close

ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்

Subscribe
BCCI-Planning-To-Stage-IPL-Outside-India-As--Last-Option-

ஐபிஎல் டி20 தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட் போட்டிகளும் அடக்கம். இந்தியாவில் ஆண்டுதோறும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவும் இந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் இதுவரை தொடங்கவில்லை. தொடங்கும் தேதியும் தீர்மானிக்கப்படவில்லை.

image


Advertisement

இந்நிலையில் ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும், தற்போது வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே கடைசி வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.

image

அத்துடன் வெளிநாட்டில் ஐபிஎல் நடப்பது ஒன்றும் புதிதல்ல எனவும், ஏற்கெனவே 2009ஆம் தென்னாப்பிரிக்காவிலும், 2014ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலும் நடத்தப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் முடிந்தவரை இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்னுரிமை தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை : சுகாதாரத்துறை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close