JUST IN

Advertisement

"தலைசிறந்த ஐபிஎல் அணிக்கு தோனிதான் கேப்டன்" - ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட "லிஸ்ட்"

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா எப்போதும் சிறந்து விளங்கும் 11 வீரர்களைக் கொண்ட ஐபிஎல் அணியைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு தோனியை கேப்டனாக்கியுள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக வளம் வருபவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் ஐபிஎல் போட்டிகளில் 2015 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

image


Advertisement

இந்நிலையில் சிறந்த ஐபிஎல் அணி பட்டியலை வெளியிட்டுள்ளார் ஹர்திக் பாண்ட்யா. அந்த அணிக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டனான ரோகித் சர்மாவுக்குப் பதிலாக சிஎஸ்கே கேப்டன் தோனியை கேப்டனாக்கி இருக்கிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ்ல பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், வீரர்கள் தங்களுக்குப் பிடித்த அணியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஹர்திக் பாண்ட்யாவும் தனது ஆல்டைம் ஐபிஎல் அணியை வெளியிட்டுள்ளார்.

image

ஹர்திக் பாண்ட்யாவின் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில், ரோகித் சர்மாவும் இருக்கின்றனர். இதற்கடுத்த படியாக ஏபிடி வில்லியர்ஸும், சுரேஷ் ரெய்னாவும் இருக்கின்றனர். பின்பு விக்கெட் கீப்பரும் கேப்டனுமாக தோனியை தேர்வு செய்துள்ளார். ஆல் ரவுண்டரில் தன்னுடைய பெயரைச் சேர்த்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக சுனில் நரேனையும், ரஷீத் கானையும் அணியில் இணைத்துள்ளார். வேகப்பந்துவீச்சு பட்டியலில் பும்ராவையும், மலிங்காவையும் சேர்த்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement