சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
சென்னையில் கொரோனா பாதிப்புடையவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் லேசான கொரோனா அறிகுறி இருந்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளச் சென்னை மாநகராட்சி அனுமதி அளித்திருந்தது. அவர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த அறிவுறுத்தலை 80% பேர் மட்டுமே பின்பற்றுவதாகவும், மீதமுள்ள 20% பேர் பின்பற்றுவதில்லை என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அத்துடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் முறை ரத்து செய்யப்படுவதாகவும், வெளியே சுற்றிய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
மாநகராட்சி ஆணையர் இவ்வாறு தெரிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பைத் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் கொரோனா உள்ளவருடன் தொடர்பிலிருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் முறை தொடரும் என்று தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
Loading More post
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்