JUST IN

Advertisement

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒரு மாதத்திற்கு மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவலை குறைக்க முடியம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா பரவலின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறியுள்ளது. தினமும் அங்கு நூற்றுக்கணக்கான நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

image


Advertisement

 

அதன்படி இன்று சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் கூறும்போது “கொரோனா பரவலை குறைக்க, பொதுமக்கள் அனைவரும் அடுத்து வரும் ஒரு மாதத்துக்கு முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பாதிப்பு பகுதிகளில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தனிமைப்படுத்த நேரிடும். கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம்” என்று பேசினார்.


Advertisement

 

நேற்று மட்டும் சென்னையில் 1,012 நபர்களுக்கு கொரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement