உலகக் கோப்பையில் இந்திய அணி வேண்டுமென்றே தோற்றது- அப்துல் ரசாக்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி வேண்டுமென்றே தோல்வி அடைந்ததாக பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் குற்றம் சாட்டியுள்ளார். 


Advertisement

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டி அளித்த அவர், "நாங்கள் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தோம், எங்கள் அனைவருக்கும் அதே உணர்வு தான் ஏற்பட்டது. ஒரு நல்ல பந்து வீச்சாளர் அவரது நிலைப்பாட்டில் பந்து வீசவில்லை. ரன்களை அதிகம் கொடுக்கிறார்" என தெரிவித்தார். 

image


Advertisement

மேலும் "எங்களுக்கு சந்தேகமே இல்லை. பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்கு முன்னேற விடாமல் செய்யவே, இங்கிலாந்துடன் இந்தியா வேண்டுமென்றே தோற்றது எனவும் இதற்காக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

image

இதைத்தொடர்ந்து, அரையிறுதியில் பாகிஸ்தான் விளையாடுவதை இந்தியா விரும்பவில்லை என சில மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் தன்னிடம் கூறியதாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அஹ்மது தெரிவித்துள்ளார். 


Advertisement

image

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பை பயணம் குறித்து தான் எழுதிய புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். அதில், இங்கிலாந்து உடனான போட்டியில் இந்திய வீரர் தோனியின் விளையாட்டு இலக்கில்லாமல் இருந்ததாகவும், ரோகித்- கோலியின் பார்ட்னர்ஷிப் மர்மமாக இருந்ததாகவும் அவர் எழுதியது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement