சாலையில் தவறவிட்ட பெண்ணின் 11 ஆயிரம் ரூபாய் பணத்தை அரை மணி நேரத்தில் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை மாவட்டம் திருநகரைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர், திருநகர் காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக தான் வைத்திருந்த 11 ஆயிரம் ரூபாய் பணத்தை தவற விட்டுள்ளார். இந்நிலையில் திருநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கலையரசன், சாலையில் கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் 11 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் தனலட்சுமி தனது பணத்தை தவறவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் கணேசன் முன்னிலையில் தனலட்சுமியிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. பெண்மணி தவறவிட்ட பணத்தை உடனடியாக உரியவரிடம் ஒப்படைத்த காவலர் கலையரசனின் நற்செயலை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டியுள்ளார்.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்