JUST IN

Advertisement

மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் நேற்று அலுவலகத்துக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்புத் துறை செயலாளருடன் தொடர்பில் இருந்த 30-க்கும் மேற்பட்டோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

image


Advertisement

இது குறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு கூறும்போது “ இதைப் பற்றி தற்போது கூறுவதற்கு ஒன்றுமில்லை. தொலைப்பேசி வாயிலாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. முக்கிய அதிகாரிகள் சிலர் தொலைப்பேசி வாயிலாக எங்களை தொடர்பு கொண்டனர். ஆனால் யாருக்கும் நாங்கள் எந்த விளக்கமும் அளிக்க வில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரது இல்லத்தில் இருக்கிறார். ஆனால் அவர் தனிமைப்படுத்தப்படவில்லை” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement