JUST IN

Advertisement

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா உறுதி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
தமிழகத்தில் இன்று 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Image
 
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25, 872  ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 4  வது நாளாக இன்றும்ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
Image
 
அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316 உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
சென்னையில் மட்டும் இன்று 1,012 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 17,598 ஆக உயர்ந்துள்ளது.
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement