தனியார் ஆய்வக கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் - சென்னை மாநகராட்சி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் எனச் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த மூன்று நாட்களாக, நாள்தோறும் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டி வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தமாக 24,586 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13,706 பேர் குணமடைந்துள்ளனர். 10,680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
image 
 
இதனிடையே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று மட்டும் கொரோனா வார்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர். 6 பேர் கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்துள்ளனர். அவர்களின் பிரேதம் மீண்டும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 9 மணிக்கு முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்தனரா இல்லையா என்பது தெரியவரும்.
 
Image
 
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களின் முழு விவரங்களையும் பெற வேண்டும் எனத் தனியார் ஆய்வகங்களுக்குச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கி, ஆணைப் பிறப்பித்துள்ளது. 
loading...

Advertisement

Advertisement

Advertisement