‘ஒரே தேசம் ஒரே சந்தை’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- பிரகாஷ் ஜவடேகர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


Advertisement

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் ஜவடேகர், முதலீடுகளை அதிகரித்து அதன் மூலம் தொழில் வளர்ச்சி அடைவதால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்றார். நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகக் கூறினார்.

image


Advertisement

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும், உற்பத்தியைப் பெருக்க வழிகாட்டுதல்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் விவசாயிகளுக்காக 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன்மூலம் விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகம்

loading...

Advertisement

Advertisement

Advertisement