மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாள் விழா, கொரோனா பாதிப்பு காரணமாக திமுகவினரால் இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவர் இல்லாத சூழலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை திமுக எதிர்கொள்ள உள்ளது.
கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் தான் மாறி மாறி ஆண்டு வருகின்றன. இந்நிலையில் முதன் முறையாக இருபெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாமல் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் களம் காண உள்ளன. ஏற்கெனவே, நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றிருந்தாலும் அது பாஜகவுக்கு எதிரான வெற்றியாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் கருணாநிதி இல்லாமல் அவரது மகனாய், தி.மு.க.வின் தலைவராய் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காண இருக்கிறார்.
1960-ஆம் ஆண்டில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளை முழுமையாக பின்பற்ற முடியாமலும், தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற முடியாமலும் இரண்டு திராவிட கட்சிகளும் இருப்பதாக பரவலான கருத்து உள்ளது. இந்நிலையில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல், டிஜிட்டல் தொழில் நுட்பத்தை மையமாக வைத்து தான் தேர்தல் நடக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன். டிஜிட்டல் யுகத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதை உணர்ந்து இணைய தளம் மூலம் திமுக தொடங்கிய 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டம் அவர்களுக்கு கைகொடுக்கும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தல் என்பது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும், ஆளுமை மிக்க தலைவரை தீர்மானிக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!