பொள்ளாச்சி வந்த மணமகன்.. கொரோனா உறுதியானதால் கடைசி நேரத்தில் திருமணம் ரத்து..!

After-29-days-in-Goa-Corona-for-5-people--including-the-groom

டெல்லியில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த மணமகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கடைசி நேரத்தில் திருமணம் ரத்து செய்யப்பட்டது.


Advertisement

image
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 29 நாட்களாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஜூன் 1-தேதி நடக்க இருந்த திருமணத்திற்காக, கடந்த 29-ஆம் தேதி டெல்லியிலிருந்து பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாலையம் பகுதிக்கு மணமகன் உட்பட 5 பேர் வந்தனர். இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் 5 பேருக்கும் கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நடக்க வேண்டிய திருமணம் ரத்து செய்யப்பட்டது,  இதனையடுத்து அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement