JUST IN

Advertisement

தமிழகத்தில் இன்று 1091 பேருக்கு கொரோனா - சென்னையில் மட்டும் 809..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இன்று 1091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 13,706 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை மொத்தம் 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 809 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement