பாஜகவின் வற்புறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்: டிடிவி ஆதரவாளர் புகழேந்தி

Pugazenthi-says-AIADMK-not-bow-to-the-BJP-s-pressure-on-presidential-election

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வற்புறுத்தலுக்கு அதிமுக அம்மா அணி அடிபணியாது என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.


Advertisement

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க நிர்பந்திக்க முடியாது. குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், துணைப் பொதுச்செயலாளரும் முடிவெடுப்பார்கள். அதை நடைமுறைப்படுத்த வேண்டியது முதலமைச்சரும், அமைச்சர்களும். பாஜக அறிவிக்கும் வேட்பாளர் யார் என்று பார்த்துவிட்டுதான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அப்துல் கலாம் போன்ற வேட்பாளராக இருந்தால் ஆதரிப்போம். ஆகவே, அதிமுக ஆதரவு எங்களுக்குதான் என பாஜக சொல்ல முடியாது” என்றார்.

மேலும், மதுரையில் உள்ள தொண்டர்கள் ஜெயலலிதா சிலையை திறக்க வேண்டுகோள் வைத்தனர். அதன்படி அம்மா வெங்கல சிலை மதுரையில் டி.டி.வி. தினகரனால் திறக்கப்படும் என்றார். சரவணனின் பேரம் தொடர்பான குற்றசாட்டு வீடியோ உண்மையில்லை எனவும், ஆர்.கே.நகரில் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை எனவும் புகழேந்தி கூறினார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement