JUST IN

Advertisement

4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Advertisement

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இந்த புயலுக்கு நிசர்கா எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தற்போது அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தெரிவித்தது.

image


Advertisement

இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. லட்சத்தீவு மற்றும் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு ஜூன் 4-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி: கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூதாட்டி கைது


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement