சென்னை: போலீசாருக்கு சுழற்சி முறையில் 7-ல் இருந்து 10 நாட்கள் வரை ஓய்வு வழங்க முடிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7-ல் இருந்து 10 நாட்கள் வரை ஓய்வு வழங்க சென்னை போலீஸ் கமி‌ஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 320 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 முதல் 10 நாட்கள் வரையில் ஓய்வு அளிக்க போலீஸ் கமி‌ஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீசார் இந்த ஓய்வை எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த காவல் நிலைய உதவி ஆணையர் அதனை மேற்பார்வை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையை பொருத்து 10 நாள் ஓய்வு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் அனைத்து போலீசாரும் பயன் பெறும் வகையில் ஓய்வை பிரித்து வழங்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிப்படையாமல் இருக்க ஏற்கெனவே 50 வயதிற்கு மேல் உள்ள போலீசாருக்கு ஓய்வு அல்லது வேறு பணி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement