ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் விண்வெளிக்குப் போனதா எலி?: பரபரப்பை கிளப்பிய இணையவாசிகள்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் இரண்டு விண்வெளி வீரர்கள் மட்டுமல்லாமல் ஒரு எலியும் சென்றுள்ளதாக ட்விட்டர்வாசிகள் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்கள்


Advertisement

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சனிக்கிழமையன்று விண்வெளிக்குப் புறப்பட்டது ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட். இந்த ராக்கெட்டில் நாசாவைச் சேர்ந்த டாக் ஹூர்லே மற்றும் பாப் பெஹ்ன்கன் என்ற இரு விண்வெளி வீரர்களும் சென்றுள்ளனர். கடந்த புதன்கிழமை திட்டமிடப்பட்டிருந்த ஃபால்கான் 9 ராக்கெட்டின் பயணம் வானிலை சரியில்லாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது.

image


Advertisement

அதன்படி கடந்த சனிக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய தனியார் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது ஸ்பேஸ் எக்ஸ். இந்நிலையில் இந்த ராக்கெட்டில் இரண்டு விண்வெளி வீரர்கள் மட்டுமல்லாமல் ஒரு எலியும் சென்றுள்ளதாக ட்விட்டரில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்கள் ட்விட்டர்வாசிகள்.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ள இணையவாசிகள் அதில் எலி போன்ற ஒரு உருவம் ஓடுவதைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது குறித்து நாசா எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.


Advertisement

பணிக்காலத்தின் கடைசி நாளில் அலுவலகத்தில் படுத்துத்தூங்கிய ஐபிஎஸ் அதிகாரி - வைரல் மேன்  

loading...

Advertisement

Advertisement

Advertisement