JUST IN

Advertisement

“மிரட்டல்களால் மோகன் பாஜகவில் இணைந்ததை மறுக்கிறார்” - மதுரை பாஜக ஹரிஹரன் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுகவினர் உள்ளிட்ட சிலரின் மிரட்டல்களாலும், அச்சுறுத்தல்களாலும் பாஜகவில் இணைந்ததை சலூன் கடை மோகன் மறுப்பதாக மதுரை பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

பாஜகவில் இணைந்ததை மதுரை சலூன் கடை மோகன் மறுத்தது தொடர்பாக, மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஹரிஹரனிடம் புதிய தலைமுறை சார்பில் பேசினோம். அவர் கூறும்போது, “சலூன் கடை மோகன் மதுரை மாவட்ட தலைவரிடம் பேசிய பின்னர், மாவட்ட தலைவர் தரப்பிலிருந்து மோகன் கட்சியில் இணைய இருப்பதாக எனக்குத் தகவல் வந்தது. இதையடுத்து மோகனும் வாழ்த்து தெரிவிக்க நேரில் சென்றோம். அப்போது அவராகவே தான் பாஜகவில் இணைவதாக விருப்பம் தெரிவித்தார்.

image


Advertisement

அதன்பின்னர் முறைப்படி ‘மிஸ்டு கால்’ கொடுத்தே மோகன் கட்சியில் சேர்க்கப்பட்டார். தற்போது திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருக்கும் மோகனுக்குத் தெரிந்தவர்களின் சிலரது மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அவர் பாஜகவில் இணைந்ததை மறுக்கிறார். தன்னை பலர் குழப்புவதாகவும் மோகன் என்னிடம் கூறினார். பாஜகவிற்கு விளம்பரம் தேட வேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் காஷ்மீரிலேயே குடியேற்றிவிட்டோம். தமிழகத்தில் குடியேற்றுவது ஒரு விஷயமல்ல” என்று தெரிவித்தார்.

image

முன்னதாக பிரதமர் மோடி நேற்றைய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசும்போது மக்களின் அர்ப்பணிப்பு குறித்தும் பேசினார். அப்போது மதுரை மேலமடையைச் சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழில் செய்துவரும், சலூன் கடை உரிமையாளர் தனது மகளின் கல்வி செலவிற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கு நேரத்தில் ஏழைகளுக்கு உதவியுள்ளதாகவும், எனவே தான் அதற்குப் பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


Advertisement

“நான் பாஜகவில் இல்லை..ஆனால் மோடியை பிடிக்கும்” - மதுரை சலூன் கடை முருகன்..!

இதைத்தொடர்ந்து மோகன் பாஜகவில் இணைந்ததாகவும், பாஜகவினர் பொன்னாடை போர்த்தி அவரைப் பாராட்டும் புகைப்படங்களும் வெளியாகின. இதுதொடர்பாக உண்மைத் தன்மையை அறிய சலூன் கடை உரிமையாளர் மோகனிடம் புதிய தலைமுறை சார்பில் போனில் பேசினோம். அப்போது பாஜகவில் இணைந்துவிட்டீர்களா ? என்ற கேள்விக்குத் தான் எந்தக் கட்சியிலும் இணையவில்லை. ஆனால் மோடியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார். அத்துடன் கட்சியில் இணைவது குறித்து தன்னால் இப்போது கூற முடியாது எனவும், இன்னும் ஒரு வாரத்திற்குப் பின்னர் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement